search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இயற்கை எழில் கொஞ்சும் சுயம்பு கல்யாண அம்மன்
    X

    இயற்கை எழில் கொஞ்சும் சுயம்பு கல்யாண அம்மன்

    • பக்தர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி பொட்டு வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபடுகின்றன.
    • சிறந்த குல தெய்வக்கோவிலாக திகழும் இக்கோவில் ராகு-கேது பரிகார தலமாகவும் சிறந்து விளங்குகிறது.

    இந்த அம்மனுக்கு எதிர் திசையில் கருப்பண்ணசாமி வீற்றிருக்கிறார்.

    இங்கு கேணிக்குளம் என்ற பெயரில் தீர்த்தகுளம் உள்ளது.

    ஆழமான அந்த குளத்தையொட்டி தீர்த்தகிணறும் அமைந்துள்ளது.

    இந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் புனிதநீரைக் கொண்டுதான் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    கோவில் வளாகத்தில் பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.

    சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த மரத்தின் வேர் மூட்டுக்களில் 'சுயம்பு கல்யாண அம்மன்' என்ற உருவம் இயற்கையாக தோன்றியதாக சொல்கிறார்கள்.

    அரச மரத்தடியில் நாகதேவதைகளும் உள்ளனர்.

    பக்தர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி பொட்டு வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபடுகின்றன.

    சிறந்த குல தெய்வக்கோவிலாக திகழும் இக்கோவில் ராகு&கேது பரிகார தலமாகவும் சிறந்து விளங்குகிறது.

    வடகிழக்கு மூலையில் விநாயகரும், ஜெயவீர ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளன.

    இங்கு வடக்கு நோக்கி முகத்தை திருப்பிய நிலையில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.

    ஜெயவீர ஆஞ்சநேயர் வாலில் மணிகட்டிய நிலையில் வாலை தலைக்கு மேலே தூக்கி ஆபத்துகளை போக்கி வெற்றிகளை தரக்கூடியவராக திகழ்கிறார்.

    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் தலைமுறை தலைமுறையாக இந்த கோவிலுக்கு வந்து குலதெய்வ வழிபாட்டை செய்கின்றனர்.

    இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மிகப்பழமையான இக்கோவிலை புனரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

    Next Story
    ×