search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஜோதிர்லிங்கத்தின் தத்துவம் என்ன?
    X

    ஜோதிர்லிங்கத்தின் தத்துவம் என்ன?

    • இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும்.
    • அது குளிர்ந்தால் உலகமே குளிரும். அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்.

    ராமேஸ்வரத்துக்கு போய் ஜோதிர்லிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் தத்துவம் என்ன?

    யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள்.

    அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும்.

    அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள்.

    இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும். அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்.

    நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல.

    நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே. லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

    Next Story
    ×