search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கணையாழி மற்றும் பிரயோகச் சக்கரத்துடன் திருமால்
    X

    கணையாழி மற்றும் பிரயோகச் சக்கரத்துடன் திருமால்

    • காஞ்சி மாநகரில் திருமணம் செய்து கொள்வதாகவும் அசரீரியாய் அறிவித்தார்.
    • எனவே வைகுண்டப் பெருமாளை ‘சீர்பெருமாள்’ என்றும் ‘தடைநீக்கும் பெருமாள்’ என்றும் அழைக்கிறார்கள்.

    பூவுலகில் பார்வதியை மணமுடிக்க பரமன் வருவதை அறிந்த திருமால், பூவுலக முறைப்படி திருமணம் நடைபெறுவதால் தன் குடும்பம் சீராக கணையாழியை வலக்கரத்தில் எடுத்துக்கொண்டு,

    இறைவனின் திருமணத்திற்கு தடையேதும் இருப்பின் அதனை விலக்கிடவே வலக்கரத்தில் அருளாழி என்னும் சக்கரம்,

    உடன் செலுத்தக்கூடிய நிலையில் பிரயோகச் சக்கரமாக தயார் நிலையில் வைத்துக் கொண்டு, புவிமாது திருமாது (பூமிதேவி, ஸ்ரீதேவி)

    புடைசூழ மாங்காட்டை வந்தடைந்தார்.

    இறைவியின் தவத்தால் பூவுலகில் தோன்றிய சிவபெருமான் சுக்கிர முனிவரின் கடுந்தவத்தால் இறைவிக்கு காட்சி கொடுக்காமல் அம்மையிடம் காஞ்சி மாநகர் வந்து தவம் செய்வதை தொடர்வாய் என்றும்,

    காஞ்சி மாநகரில் திருமணம் செய்து கொள்வதாகவும் அசரீரியாய் அறிவித்தார்.

    எனவே திருமாலும் காஞ்சி மாநகருக்கு புறப்பட்டார்.

    அம்மனின் தவம் காஞ்சி மாநகரிலும் தொடரும் என்றும் பின்னர்தான் திருமணம் நிகழ்வதாகவும் எனவே அதுவரையில் இங்கேயே தங்கும்படியும் மார்க்கண்டேய மகரிஷி (இருடி) திருமாலிடம் வேண்டினார்.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் (சீர் பெருமாள்):

    மார்க்கண்டேய மகிரிஷியின் வேண்டுதலுக்கிணங்க திருமால் அருள்மிகு வைகுண்டப் பெருமாளாக எழுந்தருளினார்.

    இறைவன் இறைவி திருமணத்திற்கு இடையூறு நிகழா வண்ணம் பிரயோகச் சக்கரத்துடன் இருக்கும் இவர் தன் தங்கைக்கு சீர்கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழியுடன் (மோதிரம்) காட்சி தருகிறார்.

    எனவே வைகுண்டப் பெருமாளை 'சீர்பெருமாள்' என்றும் 'தடைநீக்கும் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.

    Next Story
    ×