என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
கோபத்தில் மலையை பெயர்த்து சாபம் கொடுத்த ஆஞ்சநேயர்
- காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.
- இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.
"நான் கொண்டு வந்த லிங்கம் இங்கே வேரூன்றி நின்றதற்கு இந்த காளிங்க மடுகு தான் காரணம்.
இது வற்றியிருந்தால் நான் லிங்கத்தை மாய சிறுவனிடம் கொடுக்காமல், தட்டுத்தடுமாறி சற்று தாமதமாகவாவது ராமேஸ்வரம் போய் சேர்ந்திருப்பேனே என்று மடுகின்மேல் ஆஞ்சநேயருக்கு கடும் கோபம் வந்தது.
அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்தார்.
அந்த மடுகு மீது போட்டு "இந்த மலைப்பிரதேசம் இனி வனப்பிரதேசமாகப் போகக்கடவது என்று சபித்தார்.
அந்த காரிகிரி மலையே இப்போது நாம் ராமகிரியில் காணும் பெரிய மலை.
ராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காக காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் ஆஞ்சநேயர் மறுபடியும் காசிக்கு சென்றார்.
இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியம் அளித்தது.
காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.
இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.
அப்போது ஒரு குறிப்பிட்ட லிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது.
அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார்.