என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![கோபத்தினால் கர்வத்திற்கு உள்ளான ஆஞ்சநேயர் கோபத்தினால் கர்வத்திற்கு உள்ளான ஆஞ்சநேயர்](https://media.maalaimalar.com/h-upload/2024/05/28/2369194-08.webp)
கோபத்தினால் கர்வத்திற்கு உள்ளான ஆஞ்சநேயர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.
- மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.
சிறுவன் குரல் கேட்டு திடுக்கிட்ட ஆஞ்சநேயர் விரைந்து கரையேறினார்.
சிறுவன் நின்ற இடத்துக்கு ஓடி வந்தார். அங்கு "பூமியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
"இப்படி செய்து விட்டானே இந்த சிறுவன்" என்று கோபப்பட்டார்.
கோபம் கண்ணை மறைக்க, தான் ஏற்கனவே காசியில் இருந்து பெயர்த்தெடுத்து வந்த லிங்கம் தானே இது என்ற அலட்சிய உணர்வு ஏற்பட்டது.
சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்த தனக்கு, இந்த சிவலிங்கம் எம்மாத்திரம் என்ற ஆணவத்தாலும், தன் பலமிக்க நீண்ட வாலினால் அந்த சுயம்பு சிவலிங்கத்தை சுற்றி இழுத்தார்.
ஆனால் லிங்கம் அசையவில்லை. சற்றும் லிங்கம் அசையாதிருக்கவே சுற்றியிருந்த வாலை சற்று இறுக்கி, பலமாக இழுத்தார்.
ஆனால் லிங்கமோ இருந்த இடத்தை விட்டுத் துளி கூட நகரவே இல்லை.
முயற்சியை கைவிடாத ஆஞ்சநேயர் தன் முழு பலத்தையும் பிரயோகித்து இழுத்தபோது கூட போனால் போகிறது பாவம் என்று பரிதாபப்பட்டுப் பரிகசிப்பது போல லிங்கம் சிறிது வடக்குப் புறமாகச் சாய்ந்ததே தவிர பெயர்ந்து வரவில்லை.
முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.
மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.