என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
கோமாதா எங்கள் குலமாதா
- “கோ” என்றால் கடவுள், அரசன், உலகம் என்று பொருள். மாதா என்றால் தாய்.
- இதனால் கடவுளைப் பெற்றவள் என்ற பெயரும் கோமாதா எனப்படும் பசுவுக்கு உண்டு.
கோமாதா என்னும் சொல்லில் கோ-மாதா என்னும் இருசொற்கள் அடங்கியுள்ளன.
"கோ" என்றால் கடவுள், அரசன், உலகம் என்று பொருள்.
மாதா என்றால் தாய்.
இதனால் கடவுளைப் பெற்றவள் என்ற பெயரும் கோமாதா எனப்படும் பசுவுக்கு உண்டு.
பசுவின் உடலின் அனைத்து பாகத்திலும் அனைத்து தேவர்களும் வசிப்பதாக வேத ஆகமங்கள் கூறுகின்றன.
கொம்புகளில் வீமனும், இந்திரனும், காதுகளில் அசுவினி குமாரர்களும், கழுத்து தாடைப் பகுதிகளில் ராகு கேதுவும்,
இரண்டு கண்களில் சூரியன் சந்திரனும், மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும் முருகனும், முன்னிரண்டு கால்களில்
பைரவரும் அனுமனும், கழுத்து முதலான பகுதிகளில் லட்சுமி, பரத்வாசர், குபேரர், வருணன், அக்னி, பிரம்மன்,
கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு பராசரர், விஸ்வாமித்திரர்,
அமிர்தசாகரர் ஆகியோரும் வால்பகுதியில் நாகராஜனும், முன்குளம்பு பகுதியில் மந்திராசலம், துரோணசலம்
ஆகிய பர்வதங்களும், மடியில் அமிர்தசுரபிக் கலசமும் இன்னும் பிற தேவர்களும் வசிப்பதாக ஐதீகம்.
பசு கேட்டதையெல்லாம் கொடுப்பதால் காமதேனுவாக எல்லாருக்கும் பால் அளிப்பதால் கோமாதாவாக,
மங்காத செல்வமுடையதால் மாடு எனும் பெயருடனும் (மாடு செல்வம்) சிறப்பு பெற்றது.