search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    லட்சுமி கடாட்சம் பெற அஷ்டமி ததியில் கருடனை தரிசியுங்கள்
    X

    லட்சுமி கடாட்சம் பெற அஷ்டமி ததியில் கருடனை தரிசியுங்கள்

    • கருட பகவானுக்கு உரிய திதி ‘பஞ்சமி’ ஆகும்.
    • பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.

    எந்த திதியன்று கருட தரிசனம் செய்கிறோமோ அந்தத் திதியின் அதிதேவதையின் அருளாசியும்,சுபிட்சங்களும் நமக்கு கிடைக்கும்.

    கல்வி,ஞானம், அறிவு, படிப்பில் நல்ல உயர்வு, வெற்றி கிடைக்க வேண்டுவோர் வளர்பிறை 'நவமி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    அஷ்ட ஐஸ்வர்யங்கள் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டுவோர் வளர்பிறை 'அஷ்டமி' திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை 'பிரதமை'யன்று கருட தரிசனம் ஆகும்.

    சந்திரனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக வளர்பிறை 'திரிதியை' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை ஸப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக வளர்பிறை 'சஷ்டி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க 'வளர்பிறை சதுர்த்தி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும் வேண்டுவோர் வளர்பிறை 'துவாதசி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    கருட பகவானுக்கு உரிய திதி 'பஞ்சமி' ஆகும்.

    எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு.

    பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.

    தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்ய வேண்டும்.

    மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் 'துவாதசி' திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும் வாழ்வில் நல்ல மேம்பாடு அடையவும் வேண்டுவோர் தேய்பிறை 'தசமி'திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    முனிவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமானால் தேய்பிறை 'சப்தமி' அன்று கருட தரிசனம் செய்யவும்.

    குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை 'பிரதமை' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    எமபயம் நீங்கவும் மரண பயம் விலகவும் தேய்பிறை 'நவமி' அன்று கருட தரிசனம் செய்யவும்.

    கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை 'ஏகாதசி' அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.

    ராகு கேதுக்களின் அனுக்கிரகம் கிடைக்கவும் ராகு கேது தசாபுத்தி நடைமுறையில் உள்ளவர்கள் தேய்பிறை 'அஷ்டமி' அன்று கருட தரிசனம் செய்ய நல்ல பலன்கள் நடைமுறைக்கு வரும்.

    அமாவாசை திதி அன்று கருட தரிசனம் செய்வது பித்ருக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். இதனால் அளப்பறிய நன்மைகள் வாழ்வில் உண்டாகும்.

    ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.

    பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.

    சிவனின் அருளாசி கிட்ட தேய்பிறை 'திரயோதசி' பிரதோஷ காலத்தில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    திருமண பாக்கியம் உண்டாக தேய்பிறை 'துவாதசி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். நல்ல வரன் கிடைக்கும்.

    ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், லாபமும், அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுவோர் தேய்பிறை, 'சஷ்டியில்' கருட தரிசனம் செய்ய வேண்டும்.

    எந்த திதி அன்று கருட தரிசனம் செய்தாலும் அத்திதியின் அதி தெய்வ அருளாசியால் நமக்கு நல்ல பலன்களே விளையும்.

    எனவே ' நித்திய கருட தரிசனத்தை ஒரு வழக்கமாக பழக்கமாக, தவமாக, வழிபாடாகக் கொண்டால் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் பெற்று வாழலாம்.

    ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தில் தவறாமல் கருட தரிசனம் செய்தே ஆக வேண்டும்.

    Next Story
    ×