search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மகிமை நிறைந்த மருதமலை
    X

    மகிமை நிறைந்த மருதமலை

    • இவ்விநாயகர் தானாகத் தோன்றியவர். சிற்பியால் உளிபட்டுச் செய்யப்பட்டதல்ல.
    • சில ஐயப்பன் பக்தர்கள் இந்த படிகளில் வந்து பூஜை செய்கிறார்கள்.

    மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் நடைபாதையில் உள்ள, தான் தோன்றி விநாயகரை வழிபட வேண்டும்.

    இவ்விநாயகர் தானாகத் தோன்றியவர்.

    சிற்பியால் உளிபட்டு செய்யப்பட்டதல்ல.

    சுயம்புவாக ஒரு பாறையிலே விநாயகரின் லட்சணம் பொருந்தும்படியாக தன்னை தோன்றச் செய்து பக்தர்களை தன்பால் ஈர்த்து தனக்கு ஒரு கோவிலை கட்டிக்டகொண்டவர்.

    பதினெட்டாம்படி

    விநாயகர் தரிசனத்திற்குப்பின் நாம் தரிசிக்க வேண்டியது (18ம் படி) பதினெட்டாம்படி இந்த பதினெட்டாம் படிக்கும் முருகனுக்கும் நெருங்கிய சொந்தம் இருக்கிறது.

    சில ஐயப்பன் பக்தர்கள் இந்த படிகளில் வந்து பூஜை செய்கிறார்கள்.

    சபரிமலைக்குச் செல்ல முடியாத அன்பர்கள் இந்த பதினெட்டுப் படிகளை தரிசித்து பயன் அடைகிறார்கள்.

    இந்த படிகளிலே கற்பூர தீப வழிபாடு செய்பவர்கள் கடக்க முடியாத தடைகளை கடப்பார்கள் என்பது ஐதீகம்.

    Next Story
    ×