என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![மன இருள் நீக்குபவர் மன இருள் நீக்குபவர்](https://media.maalaimalar.com/h-upload/2024/04/25/2108676-11.webp)
மன இருள் நீக்குபவர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ‘குரு’ என்ற சொல்லில், ‘கு’ என்பதற்கு இருள் என்றும், ‘ரு’ என்பதற்கு ‘அறவே நீக்குதல்’ என்றும் அர்த்தம் உண்டு.
- அதாவது, ‘குரு’ என்ற சொல்லுக்கு ‘நம்மிடம் உள்ள இருளை அறவே நீக்குபவர்’ என்பது பொருளாகும்.
'குரு' என்ற சொல்லில், 'கு' என்பதற்கு இருள் என்றும், 'ரு' என்பதற்கு 'அறவே நீக்குதல்' என்றும் அர்த்தம் உண்டு.
அதாவது, 'குரு' என்ற சொல்லுக்கு 'நம்மிடம் உள்ள இருளை அறவே நீக்குபவர்' என்பது பொருளாகும்.
ப்ருஹஸ்பதி, வியாழ பகவான் என்கிற பெயரிலேயே பெரும்பாலானவர்கள் அறிந்திருந்தாலும், குரு பகவானுக்கு உரிய திருநாமங்கள் எண்ணற்றவை.
'தேவர்களின் தலைவனான இந்திரனுக்கே குருவாக விளங்குவாய்' என்று ஈசனால் அனுக்ரஹம் செய்யப்பட்டவர் குரு பகவான்.
இதனால் தேவ குரு, ஸுக்ராச்சார்யர் என்கிற திருநாமங்கள்.
குருவின் உபதேசத்தால் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் நன்மை அடைந்ததைக் குறிக்கின்றன இந்தத் திருநாமங்கள்.
தவிர வாகீசர், பொன் ஆடைகளாலும் இளமைத் தோற்றத்தாலும் காணப்படுவதால் பீதாம்பரர், யுவர் என்றும், சிறந்த தலைமைக்கு உதாரணமாக விளங்குவதால் த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர் என்றும், கருணை நிரம்பியவர் என்பதால் தயாகரர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான்.
மேலும் தனகாரகன், புத்திரகாரகன், மஞ்சள் வண்ணன், நீதிகாரகன், தாராபதி, கிரஹபீடா பரிஹாரகர், ஸௌம்யமூர்த்தி போன்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.