search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முருகன் நடனமாடிய நாள்
    X

    முருகன் நடனமாடிய நாள்

    • முருகப் பெருமான் நடனப் பிரியன். அவனே நடன சிகாமணி.
    • முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.

    ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் சூரியன் கிழக்கில் இருந்து தென்பக்கமாக உதிக்கும் காலம்.

    இக்காலத்தை தட்சிணாயன புண்ணிய காலம் என்பர்.

    தை முதல் ஆனி வரையான 6 மாத காலம் சூரியன் கிழக்கில் இருந்து வடக்குப் பக்கமாக உதிக்கும்.

    இதை உத்திராயண புண்ணிய காலம் என்பர்.

    வடதிசை இறைவனுக்குரிய திசை.

    இறைவன் வடதிசையில் வீற்றிருக்கிறான்.

    தை முதல் ஆனி வரை தேவர்களுக்கு ஒரு பகல் பொழுது, ஆடி முதல் மார்கழி வரை ஒரு இரவு.

    இந்த இரண்டும் சேர்ந்த பகலிரவு அவர்களுக்கு ஒரு நாள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

    இவ் வகையில் மார்கழி வைகறைப் பொழுதாகவும், தை மாதம் இளங்காலைப் பொழுதாகவும் கொள்ளப்படுகிறது.

    இறைவனைத் தொழ அவனுடைய அருளைப் பெற மிகச் சிறப்பான நேரம் வைகறைப் பொழுதும் இளங்காலைப் பொழுதுமாகும்.

    சூரியன் மகர ராசியில் பிரவேசித்து உதிக்கும் நாளன்று நாம் மகர சங்கராந்தி என்று தைப் பொங்கல் நாளாகக் கொண்டாடுகிறோம்.

    இந்த பிரபஞ்சத்தையும், உயிர்களையும் படைத்த இறைவன், தன் கருணையினால்,

    கருவறையில் அசைவற்றுக் கிடந்த உயிர்களுக்கு, உடல் கொடுத்து, அவன் படைத்த இந்த உலகத்தையும்

    அதன் பொருட்டான இயற்கையையும் நாம் அனுபவிக்கச் செய்து,

    இந்த பிரபஞ்சத்தை இடையறாது இயக்கி வரும் பொருட்டு,

    திருநடனம் புரிந்த தினமாகத் தைப்பூச நன்னாளை ஆன்றோர் வகுத்துள்ளனர்.

    இறைவன் உயிர்கள் பொருட்டு நடனம் புரிந்த தினம் தைப்பூச தினம்.

    இந்த பிரபஞ்சம் முழுவதும் அவன் திருநடனத்தால் தான் இயங்குகின்றன.

    எனவே இறைவன் ஆனந்த நடனம் புரிந்த நாளாகத் தைப்பூச நன்னாளைக் கொண்டாடி வருகிறோம்.

    முருகப் பெருமான் நடனப் பிரியன்.

    அவனே நடன சிகாமணி.

    முருகன் "குடை", "துடை", "பவுரி" என் னும் பலவகைக் கூத்துக்களை ஆடினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.

    அதனால் அவருக்கு "சத்ரநடன மூர்த்தி" என்று பெயர்.

    சிலப்பதிகாரம் முருகப் பெருமானின் கூத்தை விளக்குகிறது.

    சிதம்பரத்தில் எல்லாவித இசைக் கருவிகளும் ஒலிக்க முருகன் நடனமாடினான் என்பார்கள்.

    பல கோவில் சிற்பங்களில் முருகப்பெருமான் நடனம் புரியும் சிற்பங்கள் உள்ளன.

    முருகப் பெருமான் நடனமூர்த்தி என்பதற்கு இவைகள் சிறந்த எடுத்து காட்டாக விளங்குகின்றன.

    Next Story
    ×