search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாணத்தோடு அரைக்கண் பார்வையாக முருகனை பார்க்கும் அழகுமிகு வள்ளி சிற்பம்
    X

    நாணத்தோடு அரைக்கண் பார்வையாக முருகனை பார்க்கும் அழகுமிகு வள்ளி சிற்பம்

    • மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை.
    • ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பு.

    அருணாசலேசுவரர், அபிதகுஜலாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார்.

    கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

    பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.

    மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை.

    ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பு.

    வள்ளி மணவாளப்பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.

    Next Story
    ×