search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நலம் தரும் குரு பகவான்
    X

    நலம் தரும் குரு பகவான்

    • ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.
    • குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும்.

    குரு என்னும் வியாழ பகவானை தேவகுரு என்றும், நுண்ணறிவு மிக்கவராகையால் 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள்.

    ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.

    குரு நன்றாக அமைந்திருந்தால் நல்ல பிள்ளைகள், அவர்களால் முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தருவர்.

    கம்பீரமான தோற்றம், சிறந்த குரல் வளம், புகழ், சன்மானம், நல்ல வீடு, வாகனம், நல்ல நண்பர்கள், சுற்றம், தெய்வ காரியங்களில் வெற்றி போன்ற பலன்களையும் குரு தர வல்லவர்.

    குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும்.

    கோச்சார ரீதியாக ஜென்ம ராசியில் இருந்து குரு 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களுக்கு வருகையில் நன்மை உண்டாகும்.

    குருபகவானுக்கு அரசன், ஆசான், ஆண்டளப்பான், சிகண்டீ சன், சித்தன், சீவன், சுந்தரப்பொன், சுரகுரு, தேவமந்திரி, பிரகஸ்பதி, பீதகன், பொன், மந்திரி, மறையோன், வியாழன், வேதன், வேந்தன் என்று வேறு பெயர்களும் உண்டு.

    தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதியான இவருக்கு உரிய அதிதேவதை பிரம்மன், நிறம் - மஞ்சள், வாகனம்-மீனம், தானியம் - கடலை, மலர்- வெண்முல்லை, ஆடை- மஞ்சள் நிற ஆடை, புஷ்பராகமணி, உணவு- கடலைப் பொடி அன்னம், ஆபரணம்- அரசன் சமித்து, தங்க உலோகம் ஆகியன ஆகும்.

    Next Story
    ×