search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவராத்திரி திருவிழா இரண்டாம் நாள்
    X

    நவராத்திரி திருவிழா இரண்டாம் நாள்

    • கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலுவிருப்பவளே “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி”
    • கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.

    நவராத்திரி இரண்டாம் நாள் மகிஷாசூரனை வதம் செய்வதற்கு முன்பு, அவனது சேனைகளை துவம்சம் செய்ய புறப்பட்ட அன்னையை, கவுமாரியாக மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக மனதார நினைத்து பூஜிக்க வேண்டும்.

    கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலு விருப்பவளே "ஸ்ரீ ராஜராஜேஸ்வரி"

    இவளுக்குப் பிடித்த பூ மல்லிகையும், துளசியும்.

    இவற்றைக் கொண்டு அர்ச்சித்தால் மனம் நிறைந்து அருள்பாலிப்பாள்.

    கல்யாணி ராகத்தில் பாடலாம். புளியோதரையை நைவேத்தியமாய் படையுங்கள்.

    கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.

    மூன்று நிலைகளை மூன்று அக்னிகளில் சேர்த்து ஏகா அக்னியாய் நிற்பவளே அன்னை த்ரிமூர்த்தி.

    இவள் மூன்று அக்னிகளாய் இருப்பதனால் தான் ஸ்வாஹாதேவியும், ஸ்வதா தேவியும் திருப்தி அடைகின்றனர்.

    இவள் மூன்று வயதுக் குழந்தை வடிவாக இருப்பவள்.

    துவிதியை திதி நாளில் மூன்று வயதுக் குழந்தையை அழைத்து வந்து, த்ரிமூர்த்தி தேவியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    தேவி பாகவதத்தில் இரண்டு, மூன்று அத்தியாயங்களையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.

    முன்று அக்னிகளாய்த் திகழும் த்ரிமூர்த்தி தேவியை வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறவாமையை வரமாய் அளிக்கின்றாள்.

    குரு அருள் பெற்றிடவே மூன்று நிலைகளை நாம் அடைய வேண்டும். மூன்று நிலைகள் அடைய அன்னையின் அருள் வேண்டும்.

    கவுமாரி என்ற அவதாரம் முருகப் பெருமானின் சக்தியாகக் கருதப்படுகிறது.

    இவளுக்கும் 6 முகங்கள், 12 கைகள் உண்டு என்று ஸ்ரீதத்துவநியதி கூறுகின்றது.

    இவளது கரகங்கள் வரத, அபய முத்திரைகள் தவிர வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு ஆகியவற்றை ஏந்தி இருக்கும்.

    கவுமாரி 13 கண்களை உடையவள் என்று காரணாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இவள் மயிலை வாகனமாகவும், கொடியாகவும் கொண்டவள்.

    Next Story
    ×