என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![பல பெருமைகளை தாங்கி நிற்கும் தென்குடித்திட்டை தலம் பல பெருமைகளை தாங்கி நிற்கும் தென்குடித்திட்டை தலம்](https://media.maalaimalar.com/h-upload/2024/04/25/2108645-05.webp)
பல பெருமைகளை தாங்கி நிற்கும் தென்குடித்திட்டை தலம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம்.
- ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர். தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர்.
திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.
ஆக, பாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறது, திட்டை.
ஆனால், திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார், என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரிய புராணத்தில் குறிப்பிடப் படவில்லை.
இந்தத் தலத்தின் பெருமைகளை, ஸ்ரீலோக நாயகி சமேத ஸ்வயம்பூ தேஸ்வரர் புராணக் குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது.
சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென் குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!
இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம்.
ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர்.
தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர்.
திருக்கயிலாயம், காசி, திருக்காஞ்சி, சிதம்பரம் முதலான பல தலங்களில் சிவனார், மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாக, தானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள்.
அந்த வகையில், சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார்.
அப்படியான சிவ தலங்களில் 22-வது திருத்தலம் தென்குடித்திட்டை.
தலம், தீர்த்தம், மூர்த்தம்... விசேஷங்கள்!
பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம்.
வசிஷ்டர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது.
எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.
வசிஷ்ட முனிவர், கிருதயுகத்தில் பலாசவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார்.
இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில் இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றி சொல்லியிருக்கிறார்.
துவாபர யுகத்தில், வில்வ வனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.