என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ராமானுஜருக்கு அருளிய இறைவன்
- ஒரு முறை யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீ ராமானுஜரிடம் வாதிட வந்தார்.
- திருக்கச்சி நம்பிகள் பக்தர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு ஆலவட்டம் (விசிறி) கைங்கரியம் செய்து வந்தார்.
ஒரு முறை யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீ ராமானுஜரிடம் வாதிட வந்தார்.
வரதராஜர் அவர் கனவில் தோன்றி, 'யாம் இருக்கிறோம். கவலைப்பட வேண்டாம்.
ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தைக் கொண்டு வாதிட்டு யக்ஞமூர்த்தியை வெல்வீராக!' என்று கூறினார்.
ராமானுஜர் நடந்து வருவதைக் கண்டு பதறிய யக்ஞமூர்த்தி, ராமானுஜரின் கால்களில் விழுந்து தங்களின் சீடனாக ஏற்று அருள் புரிய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
ராமானுஜரும் காஞ்சி வரதராஜரின் அனுக்கிரகத்தை எண்ணி மனதார வணங்கி, யக்ஞமூர்த்தியை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.
திருக்கச்சி நம்பிகள்
திருக்கச்சி நம்பிகள் பக்தர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு ஆலவட்டம் (விசிறி) கைங்கரியம் செய்து வந்தார்.
அவருடன் நேரடியாகப் பேசி வந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் தம்முடைய கட்டளைகளை அவர் மூலமாகவே ஸ்ரீராமானுஜருக்கு தெரிவித்து வந்தாராம்.
கூரத்தாழ்வார்
ராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களை இழந்த கூரத்தாழ்வார், 'ஸ்ரீவரதராஜ ஸ்தவம்' என்ற பாடலைப் பாடி கண்களைப் பெற்ற திருத்தலம்.






