search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராமேஸ்வரம் அகத்திய தீர்த்தம்
    X

    ராமேஸ்வரம் அகத்திய தீர்த்தம்

    • பத்திரகாளி கோயிலுக்குக் கீழ்ப்புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.
    • அக்கினி தீர்த்தத்திற்கு வடக்கே அகத்திய தீர்த்தம் அமைந்துள்ளது.

    ஒன்பது தீர்த்தங்கள்

    கந்த மாதன பர்வதத்திற்குச் செல்லும் வழியிலும், அதனருகிலும் சுக்கிரீவ தீர்த்தம், அங்கத தீர்த்தம், சாம்பவ தீர்த்தம், தரும தீர்த்தம், பீம தீர்த்தம், அருச்சுன தீர்த்தம், நகுல தீர்த்தம், சகா தேவ தீர்த்தம், திரௌபதி தீர்த்தம் என்னும் ஒன்பது தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

    பிரம தீர்த்தம்

    பத்திரகாளி கோயிலுக்குக் கீழ்ப்புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.

    அனும குண்டம்

    திருக்கோயிலின் வெளி வீதிக்கு வடக்கே இத்தீர்த்தம் அமைந்துள்ளது.

    அகத்திய தீர்த்தம்

    கோவிலுக்கு வெளியே ஈசான திசையில் அக்கினி தீர்த்தத்திற்கு வடக்கே அகத்திய தீர்த்தம் அமைந்துள்ளது.

    நாக தீர்த்தம்

    ராமேசுவரம் கீழவீதியில், தேவஸ்தான கட்டிடத்தின் பின்புறமுள்ள தோட்டத்தில் நாக தீர்த்தம் அமைந்துள்ளது.

    கங்கை முதலிய எல்லா தீர்த்தங்களும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள இங்கு உறைவதாகக் கூறப்படுகின்றது.

    சடாமகுட தீர்த்தம்

    இத்தீர்த்தம், ராமேசுவரத்திற்குக் கிழக்கே தனுஷ்கோடிக்குச் செல்லும் வழியில், கோதண்ட ராமசுவாமி கோயிலுக்கு அருகில் மணல் மேட்டில் உள்ள திருக்குளம்.

    ராம லட்சுமணர்கள் இத்தீர்த்தத்தில் தங்கள் சடை முடியைக் கழுவியதாகக் கூறப்படுகின்றது.

    இத்திருத்தலத்தில் மற்றும் தேவ தீர்த்தம், விபீடண தீர்த்தம், கஜ தீர்த்தம், சரப தீர்த்தம், குமுத தீர்த்தம், அர தீர்த்தம், பனச தீர்த்தம் ஆகியவையும் இருந்ததாகப் புராண நூல்கள் கூறுகின்றன.

    Next Story
    ×