search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராமேசுவரம் தீர்த்தங்களின் வரலாறு
    X

    ராமேசுவரம் தீர்த்தங்களின் வரலாறு

    • சில நூல்களில் 56 தீர்த்தங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது.
    • வடமொழியில் `சேது’ என்றால், `பாலம்‘ என்று பொருள்.

    தலப் பெருமையும், மூர்த்தி மகிமையும் கொண்டு விளங்குகின்ற ராமேசுவரத்தலம், தீர்த்த விசேஷத்தையே முதன்மையாகக் கொண்டு விளங்குகின்றது.

    இத்தலத்தில் மொத்தம் 64 தீர்த்தங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

    சில நூல்களில் 56 தீர்த்தங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது.

    `சேது புராணம்' என்னும் தல புராணமும், `தேவையுலா' என்னும் நூலும் 24 தீர்த்தங்களை மிகச் சிறந்தவையாகக் கூறுகின்றன.

    சேது தீர்த்தம்

    இத்தீர்த்தம், ராமேசுவரம் தீவின் தென் கிழக்குக் கோடியில் அமைந்துள்ளது.

    பாம்பன் சந்திப்பிலிருந்து பிரிந்து செல்லும் ரயில் பாதை வழியே 16 மைல் தூரம் சென்று தனுஷ்கோடி நிலையத்தை அடைந்து, அங்கிருந்து கடற்கரை யோரமாக இரண்டு மைல் தூரம் நடந்து சென்றால் சேது தீர்த்தத்தை அடையலாம்.

    இத்தீர்த்தத்தைப் புனித சேது என்றும், புண்ணிய சேது என்றும், ராமசேது என்றும் மக்கள் வழங்குகின்றனர்.

    ராமேசுவரத்திற்குப் போவதற்கு முன் சேதுவில் நீராடியே செல்லுதல் வேண்டும்.

    வடமொழியில் `சேது' என்றால், `பாலம்' என்று பொருள்.

    ராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்கு இவ்விடத்தில் அணை கட்டிச் சென்றதால், `ராமசேது' என்னும் பெயர் உண்டாயிற்று.

    வங்காள விரிகுடாவும், இந்து மகா கடலும் சேருமிடத்தில் புண்ணிய சேது தீர்த்தக் கட்டம் அமைந்துள்ளது.

    ராமேசுவரம் தீவு, வில் போன்று நீண்டிருக்கின்றது.

    இதன் தென் கிழக்கு முனையில் இருப்பதால், `தனுஷ்கோடி' என்னும் பெயர் உண்டாயிற்று.

    இதனைக் `கோடி தீர்த்தம்' என்றும் அழைக்கிறார்கள்.

    இந்த இடத்தில் ராமபிரான் தம்வில்லின் நுனியால் அணையை உடைத்தார்.

    அதனால் இப்பெயர் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.

    சேதுவின் ரத்தினாகரத்தில் முதலில் நீராடுவர்.

    இப்புண்ணிய தீர்த்தத்தில் 36 நாட்கள் 36 முழுக்குகள் செய்ய வேண்டும் என்பர்.

    மக்கள் இங்கே பிதுர்க்கடன்களையும் செய்கின்றனர்.

    ஆடி, தை மாத அமாவாசைகளில் இங்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீராடுகின்றனர்.

    அர்த்தோதயம், மகோதயம் முதலிய புண்ணிய காலங்களில் ராமநாத சுவாமி இங்குப் பஞ்ச மூர்த்திகளோடு சென்று தீர்த்தம் கொடுத்தருளுகின்றார்.

    அப்போது லட்சக் கணக்கான மக்கள் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.

    Next Story
    ×