என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
சத்யநாராயண பூஜையின் பலன்கள்
- மகாவிஷ்ணுவிற்கு ‘சத்யநாராயணர்’ என்ற திருப்பெயரும் உண்டு.
- ஒருவர் இதை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம்
மகாவிஷ்ணுவிற்கு 'சத்யநாராயணர்' என்ற திருப்பெயரும் உண்டு.
சத்யநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.
மாலை 7 மணிக்கு இந்த பூஜையை செய்யலாம்.
ஸ்ரீ சத்யநாராயண பூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள்.
ஏழ்மை விலகி செல்வம் சேரும்.
பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பயம் நீங்கும்.
பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும். பாவம் நீங்கும்.
பவுர்ணமியன்று இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி,
ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் தீபாவளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும்
ஜாதகத்தில் சந்திரன் அனுகூலமாக இருக்கும் போது செய்யலாம்.
ஒரு சமயம் நாரதர் பூமிக்கு வந்தார். அப்போது வாழ்வில் பல வழிகளிலும் துன்பப்பட்ட மக்களை சந்தித்தார்.
இவர்களின் துன்பத்தை போக்கும் வழி என்ன என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார்.
அதற்கு அவர் கலியுகத்தில் சத்யநாராயண விரதம் பலன் அளிக்க கூடியது.
ஒருவர் இதை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்.