search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவனின் இந்த 12 பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்
    X

    சிவனின் இந்த 12 பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்

    • சிவபெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
    • பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.

    வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும்.

    ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என உச்சரித்து பூஜிக்க வேண்டும்.

    கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும்.

    சிவபெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

    பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.

    சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    கோவில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்கு சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

    சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.

    Next Story
    ×