என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
சொந்த வீடு கனவிற்காக சிறுவாபுரி நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்
- உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை.
- கையில் அதற்கான பணமும் இல்லை என்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம்.
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் இருக்கும். அதுபோல சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் 'சொந்த வீடு' கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து உள்ளது.
இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது.
அதுவும் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் இக்கோவிலை நாடி வரும் பக்தர்கள் அதிகம். பக்கத்து மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் இந்த கோவிலின் பெருமையை கேள்விப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
நாம் எல்லோருக்கும் எப்படியும் வாழ்க்கையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களில் இருந்து மீள சொந்த வீடு கனவு ரொம்பவே அதிகமாக இருக்கும்.
ஆனால் எல்லோரும் அந்த கனவை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடிவதில்லை.
சிலருக்கு கையில் பணம் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் சொந்த வீடு கட்டுவதில் பல தடைகள் ஏற்படுவது உண்டு.
இதுபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
உங்கள் உள்ளத்தில் உந்து சக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்து தருகிறேன் என்கிறார் சிறுவாபுரி முருகன்.
ஆம் சிறுவாபுரிக்கு வந்து முருகனை உள்ளன்போடு வணங்கினால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.
கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் உண்டு என்று சொல்வார்கள்.
இதனால் இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு எப்படியாவது சொந்த வீடு வேண்டும் என மனமுருகி வேண்டுவதால் அவர்கள் எண்ணங்களை இந்த முருகன் உடனடியாக நிறைவேற்றி தருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
இதற்காக பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள பகுதிகளில் செங்கற்களை அடுக்கி வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அகல் விளக்குகள் ஏற்றி பூக்கள் வைத்து முருகனை நினைத்து வழிபடுகின்றனர்.
சிலர் சிறு சிறு கற்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
இதற்காக அருகிலேயே செங்கற்களும் கிடைக்கிறது.
பின்னர் 6 வாரம் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தால் உங்களது ஆசை பூர்த்தியாகும் என்பது ஐதீகம்.
உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை.
கையில் அதற்கான பணமும் இல்லை என நினைப்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம்.
அதே போல 'திருப்புகழ்' பதிகத்தையும் தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும்.
இப்படி செய்வதினால் உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஏழ்மைநிலை மாறி சொந்த வீடு கட்டுவதற்கான சிறப்பான சூழ்நிலை உருவாகும்.
நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்