search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சுக்ர பகவானிடம் சாப விமோச்சனம் கேட்ட தேவர்கள்-கஞ்சனூர் வரலாறு கதை-II
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சுக்ர பகவானிடம் சாப விமோச்சனம் கேட்ட தேவர்கள்-கஞ்சனூர் வரலாறு கதை-II

    • வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.
    • தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.

    சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர்.

    வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.

    தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.

    அதற்கு சுக்ராச்சார்யர், இதற்கு ஒரு பரிகாரம் இருப்பதாகவும், காவிரி நதியின் வடகரையில் தங்கள் தந்தையார் பராசர முனிவரால் பூஜிக்கப்பட்ட பலாசவனம் என்னும் கம்ஸ புர க்ஷேத்திரத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் கற்பகாம்பிகா சமேத ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமியை வழிபாடு செய்துவர சுக்ர சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று கூறினார்.

    தேவர்களும் அவ்வாறே (இன்றைய கஞ்சனூர்) கம்சபுரத்தை அடைந்து சிவத்தை நோக்கி தவத்தைச் மேற்கொண்டு வழிபட்டு வந்ததால் பரம கருணா மூர்த்தியான சர்வேஸ்வரன் தம்பதி சமேதராக சுக்கிரனின் ராசிகளான ரிஷப ராசியில் சூரியனும் துலா ராசியில் சந்திரனும் இருக்கும் வைகாசி விசாக பெருநாளில் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

    ஆகையால் தான் கஞ்சனூரில் மட்டும் சுக்கிர பகவான் இருக்க வேண்டிய இடத்தில் எம்பெருமான் அக்னீஸ்வரராக எழுந்தருள்கிறார் என்கிறது தல வரலாறு.

    வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.

    தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.

    Next Story
    ×