search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தமிழில்  அரிய கல் வெட்டு
    X

    தமிழில் அரிய கல் வெட்டு

    • கால பைரவரை வழிபட்ட பிறகு அவரது பிரகாரத்தை சுற்றி கும்பிடுகிறார்கள்.
    • 8 தடவை சுற்றி கும்பிட வேண்டும் என்று அங்கு ஐதீகமாக உள்ளது.

    8 தடவை சுற்ற வேண்டும்

    ராமகிரி கால பைரவர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை 8 என்ற எண்ணிக்கையில் மேற்கொள்கிறார்கள்.

    கால பைரவரை வழிபட்ட பிறகு அவரது பிரகாரத்தை சுற்றி கும்பிடுகிறார்கள்.

    8 தடவை சுற்றி கும்பிட வேண்டும் என்று அங்கு ஐதீகமாக உள்ளது.

    அதேபோன்று தீபம் ஏற்றும் போதும் 8 அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற சொல்கிறார்கள்.

    தமிழில் அரிய கல் வெட்டு

    ராமகிரி நந்தி தீர்த்தத்தில் உள்ள இடப உருவத்திற்கு (நந்திக்கு) ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பெருமை உண்டு.

    அதன் பின்உடலில் கி.பி. 9-10 ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் ஒரு அரிய கல்வெட்டுப்பொறிப்பு உள்ளது. அதில்,

    'ஸ்ரீ பரமேஸ்வரன் தரிசினத்தில்

    ஏறு இடு என்று பிரசாதம் செய்ய

    சாமுண்டி மகன் கூவத்து பெருந் தச்சன் இட்ட ஏறு'

    என்ற தமிழ்ப் பொறிப்பு இடம் பெற்றுத் திகழ்கின்றது. சென்னைக்கு அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் கூவம் என்றதோர் ஊர் உள்ளது.

    அந்த ஊரினைச் சார்ந்த சாமுண்டி என்பானின் மகன் கூவத்துப் பெருந்தச்சன் என்ற சிற்பிக்கு கனவில் எழுந்தருளிய பரமேஸ்வரன் தனக்குக் கல்லில் ரிஷபம் ஒன்று அமைக்குமாறு கூற அதன்படி வடிக்கப் பெற்றதே இந்த காளைச் சிற்பம் (நந்தி) என்ற செய்தியே மேற்படி கல்வெட்டுப் பொறிப்பாகும்.

    Next Story
    ×