search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தெட்சிணாமூர்த்தி வழிபாடு
    X

    தெட்சிணாமூர்த்தி வழிபாடு

    • சிவாலயங்களில் கர்ப்பகிரகத்துக்குத் தென் புறப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்.
    • தரிசனத்துக்கு ஆனந்த தாண்டவமூர்த்தி தியானம் பண்ணுவதற்குத் தட்சிணாமூர்த்தி சந்நிதிதான்.

    சிவாலயங்களில் கர்ப்பகிரகத்துக்குத் தென் புறப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்.

    இவர் ஒரு காலை இன்னொரு கால் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

    நடராஜாவின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து கிளம்பும் சப்தங்களை எல்லாம் அடக்கிப் புத்தகமாக எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்.

    பொங்கும் ஆனந்தம் இங்கே அடங்கி இருக்கிறது. இங்கே சடை தொங்கிக் கொண்டிருக்கும்.

    இங்கே சந்திரன் நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

    தட்சிணாமூர்த்தி காட்டிக் கொண்டிருக்கிற முத்திரைக்கு "சின் முத்திரை" என்று பெயர்.

    கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

    இது ஞான முத்திரை. ஞானம் நிறைந்ததால் சாந்தம்! சாந்தம் இருக்கும் இடத்திலே ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

    அமைதியாக ஜபம் பண்ண வேண்டும் என்றால் தட்சிணாமூர்த்தி சந்நிதானத்திலே போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

    தரிசனம் பண்ணுவதனால், நடராஜாவின் சந்நிதானத்திலே சென்று பண்ண வேண்டும்.

    தரிசனத்துக்கு ஆனந்த தாண்டவமூர்த்தி தியானம் பண்ணுவதற்குத் தட்சிணாமூர்த்தி சந்நிதிதான்.

    தட்சிணாமூர்த்தி கண்ணை மூடிக்கொண்டிருப்பதைப் போல அவரது சந்நிதிதானத்திலே போய் நாமும் கண்ணை மூடிக் கொண்டு அமர வேண்டும்.

    அவருடைய சந்நிதானத்திலே நமக்கும் அந்தர்முக தியானம் கிடைக்கும்.

    எல்லோருமே தட்சிணாமூர்த்தி சந்நிதானத்திலே கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து ஜபம் பண்ண வேண்டும்.

    Next Story
    ×