என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
தன் இடப்பாகத்தில் உமையை ஏற்றுக்கொண்ட ஈஸ்வரன்
- அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.
- அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உரு வைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.
தொண்டை நாட்டுத்தலங்களில் லிங்கோற்பவரைப் போன்று சோழ நாட்டுத் திருத்தலங்களில் மாதொரு பாகன் விளங்குகிறார்.
அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.
அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உரு வைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.
ஒரு காலகட்டத்தில் தட்சனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்த பின், பரமனை மணம்புரிந்த பிறகும், பிறந்த வீட்டுப்பாசத்தினால் கட்டுண்டு இறைவனை விட்டுப்பிரிய நேர்ந்தது.
தந்தை நடத்திய யாகத்தின் தீயில் விழுந்து மாண்டு போன பிறகு மறுபிறவி எடுத்து வந்த தேவி மீண்டும் பரம்பொருளையே திருமணம் செய்து கொண்டு பல தலங்களில் தவமும் சிவபூஜையும் செய்து ஆசார நியமங்களோடு பரமனை துதித்தாள்.
இதனால் பரமேஸ்வரன் தன் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு அருள்புரிந்தார்.
பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.