என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
திருமண பரிகாரம் செய்வது எப்படி ?
- இந்த தளத்தில் திருமண பரிகார பூஜை செய்து கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
- இத்தகைய பொருட்கள் மூலம் மிக எளிதாக இந்த பரிகார பூஜையை செய்யலாம்.
சித்தர்காடு திருமணம் ஊரில் உள்ள தாத்தீரிஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் திருமண பரிகார பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த தளத்தில் திருமண பரிகார பூஜை செய்து கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதனால்தான் இந்த தலத்தை மிகச்சிறந்த பரிகார தலமாக நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
இந்த தலத்தில் திருமண பரிகாரம் செய்வதற்கு என்று சில நெறிமுறைகள் இருப்பதாக ஆலயத்தில் பூஜை செய்யும் பிரதான குருக்களில் ஒருவரான குமரன் குருக்கள் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக திருமண தடை இருப்பவர்கள் அல்லது உடனடியாக திருமணம் நடைபெற வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் இந்த தலத்தில் உரிய பரிகார பூஜையை செய்ய வேண்டும்.
யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.
போகும்போது வீட்டில் இருந்தே நெல்லிச்சாறு எடுத்துச்செல்ல வேண்டும்.
நெல்லிக்காய் வாங்கி அதை நன்கு அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து செல்ல வேண்டும்.
குறைந்தபட்சம் 2 லிட்டர் நெல்லிச்சாறு எடுத்துக்கொண்டு செல்வது நல்லது.
2 லிட்டர் நெல்லிச்சாறு இருந்தால்தான் தாத்தீரிஸ்வரருக்கு அபிஷேகம் செய்வதற்கு சரியாக இருக்கும்.
நெல்லிச்சாறுடன் பால், பன்னீரும் வாங்கிச்செல்ல வேண்டும். இந்த 3 பொருட்களாலும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்.
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் 11 வகை அல்லது 21 வகை பொருட்கள் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யலாம்.
குறைந்தபட்சம் நல்லெண்ணைய், சீயக்காய், கதம்ப பொடி, மஞ்சள்பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், தேன், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களை பயன்படுத்தி அபிஷேகம் செய்வது நல்லது.
ஆனால் இத்தனை பொருட்களையும் அபிஷேகத்துக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நெல்லிச்சாறு, பால், பன்னீர் ஆகிய மூன்றும் இருந்தாலே போதுமானது.
என்றாலும், மனதிருப்திக்காக அதிக பொருட்களுடன் அபிஷேகங்கள் செய்யலாம்.
இன்னும் வசதி இருப்பவர்கள் வஸ்திரம் வாங்கி கொடுக்கலாம்.
அதேபோன்று இந்த தலத்தில் உள்ள பூங்குழலி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்.
இதற்கு மஞ்சள்தூள், பால், பன்னீர் கொண்டு செல்ல வேண்டும்.
அதோடு தாலிச்சரடு, பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் கண்ணாடி வளையல், பிளவுஸ் பிட் கொண்டு செல்ல வேண்டும்.
வசதி இருப்பவர்கள் அம்பாளுக்கு மஞ்சள், பச்சை, மெரூன் கலரில் புடவை எடுத்து சாத்தலாம்.
6 கஜம் புடவை வாங்க வேண்டும். அதேபோன்று தாத்தீரிஸ்வரருக்கு 9-5 முழம் வேட்டி வாங்கி கொடுக்க வேண்டும்.
மேலும் அர்ச்சணை செய்வதற்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஊதுவர்த்தி ஆகியவையும் கொண்டு செல்ல வேண்டும்.
2 செட் அர்ச்சணை பொருட்கள் இருக்க வேண்டும்.
இத்தகைய பொருட்கள் மூலம் மிக எளிதாக இந்த பரிகார பூஜையை செய்யலாம்.
யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது பிறந்த நட்சத்திர தினத்தன்று இந்த அபிஷேக ஆராதனைகள் செய்வதுதான் சிறந்தது. அர்ச்சணை செய்து வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஒவ்வொருவரது ஜென்ம நட்சத்திரம் மாறுபடும் என்பதால் ஆலய குருக்களிடம் முன்கூட்டியே நேரத்தை கேட்டுக்கொண்டு செல்வது நல்லது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்