search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வைகுண்டம் செல்ல உதவும் ஏகாதசி
    X

    வைகுண்டம் செல்ல உதவும் ஏகாதசி

    • இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள்.
    • கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான்.

    நமது ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த வகையில் மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலை நேரம்.

    அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள 2 நாழிகை நேரமே தேவர்களின் விடியற்காலமாக கருதப்படுகிறது.

    இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள்.

    இந்த நேரத்தில் தான் தேவர்கள் கோவிலுக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி சொல்வார்கள்.

    இறைவன் கண் விழித்ததும் முதல் ஆராதனையை செய்வார்கள்.

    அந்த சமயத்தில் நாமும் வழிபாடு நடத்தினால் பகவானின் அருளை மிகச் சுலபமாக பெற முடியும்.

    அதனால் தான் மார்கழி மாதம் மங்களகரமான, புண்ணிய மாதமாக கருதப்படுகிறது.

    மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார்.

    பாரத யுத்தம் இந்த மாதம் தான் நடந்தது. பகவத் கீதை அருளப்பட்டது மார்கழியில் தான்.

    திருப்பாற்கடல் கடையப்பட்டதும், அதில் இருந்து தோன்றிய விஷத்தை சிவபெருமான் உண்டதும் மார்கழி மாதத்தில்தான் என்று புராணம் சொல்கிறது.

    அய்யப்பன், ஆஞ்சநேயர் அவதரித்ததும், ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி, திருப்பாவை பாடி திருமால் மனதில் இடம் பிடித்ததும் இந்த மாதத்தில்தான்.

    கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான்.

    இத்தகைய சிறப்புடைய மார்கழி மாதத்தை சிலர் மனம் போன போக்கில் பீடை மாதம் என்கிறார்கள்.

    உண்மையில் மார்கழியை நம் முன்னோர்கள் "பீடுடை மாதம்" என்றழைத்தனர்.

    பீடுடை என்றால் சிறப்பான மங்களகரம் நிறைந்தது என்று பொருள்.

    பீடுடை என்ற வார்த்தை உச்சரிப்பில் திரிந்து, மருவி பீடை என்றாகி விட்டது.

    இனியாவது மார்கழியை பீடை மாதம் என்று சொல்லாதீர்கள்.

    எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.

    திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும்.

    எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

    Next Story
    ×