search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    விதியை வெல்ல புதனை துதிக்கலாம்
    X

    விதியை வெல்ல புதனை துதிக்கலாம்

    • புதன் கிரகம் விதியால் துதிக்கப்படுகிறது. எனவே விதியை வெல்ல புதனை துதிக்கலாம்.
    • புதனை வணங்குவதால் இந்திரனும் திருப்தியடைவார்.

    1. பித்தளை, உலோகம் புதனுக்குரியது.

    2. கிரஹபதி, ஞானி, புத்திதாதா, தனப்ரதன் என்ற விசேஷப் பெயர்கள் புதனுக்கு உண்டு.

    3. ஜோதிடக்கலை புதனுக்குரியது.

    4. வாணிஜ்ய நிபுணன் (வியாபாரத்தில் சமர்த்தன்) என்ற திருநாமம் புதனைக் குறிக்கும்.

    எனவே வியாபாரிகள் புதனை வழிபடப் பெரும்பேறு அடைவர்.

    5. முத்துசுவாமி தீட்சிதர் தம் நவக்கிரக கீத்தனையில் புதனை கவி பாடும் திறன் அளிப்பவர் என்றும்,

    செவ்வாய்க்குப் பகைவர் என்றும், சுத்த சத்வ சதானந்த ரூபம் உடையவர் என்றும்

    பல சிறப்பு செய்திகளை கூறுகிறார்.

    புதனுக்கு அதிதேவதை விஷ்ணு, பிரத்யதி தேவதை நாராயணர். புதன் விஷ்ணுவைப் போல் தோற்றமுள்ளவர்.

    6. புதன் கிரகம் விதியால் துதிக்கப்படுகிறது. எனவே விதியை வெல்ல புதனை துதிக்கலாம்.

    7. புதனை வணங்குவதால் இந்திரனும் திருப்தியடைவார்.

    8. சரத்ருதுவிற்கும் அதர்வண வேதத்திற்கும் புதனே உரியவர்.

    9. கல்விக்கும், அறிவிற்கும் உரிய புத்திரகாரகன் புதன்.

    கவி ஆற்றல், கணிதம், தர்க்கம், வைத்திய அறிவு, நாடகம், நாட்டியத்திறன், புத்தகம் எழுதுதல்,

    உச்சரிப்பு ஆகியவற்றுக்கு புதன் உச்சத்தில் இருப்பதே காரணமாகும்.

    10. நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்கே அமர்பவன் புதன். புதனுக்குரியது கல்கி அவதாரம்.

    11. ஆயுர்வேதத்திற்கு உரியவரும், மஹா விஷ்ணுவின் அவதாரமானவரும், பாற்கடலில் தோன்றியவரும்,

    அமுத கலசத்தை கையில் ஏந்தியவருமான தன்வந்திரி பகவானைத் துதித்தால் புதன் மகிழ்ச்சியடைவார்.

    12. புதனுக்கு வேம்பு இலையில் சர்க்கரையும், நெய்யும், பாலும் கலந்த சோற்றை வடதிசையில்

    கிரக பலியாகக் கொடுக்க புத பகவான் திருப்தியடைவார்.

    13. புலமைக்கும், வணிகத்திற்கும் உரிய கடவுளாக புதனை பண்டைய கிரேக்கர் வழிபட்டனர்.

    14. புதன் பொன்னிறமானவன். 'கோங்கு' என்ற மலரின் நிறமுடையவன். மஞ்சள் நிற ஆடை புனைந்தவன்.

    மஞ்சள் நிறக் குடையும், கொடியும் உடையவன். மஞ்சள், சந்தனம் தரிப்பவன்.

    15. நல்லோரது நட்பு, தாய்மாமனின் நிதி நிலைமை, நம் கல்வி, புத்தி, அமைதி, ராஜசன்மானம், விவேகம்

    ஆகியவற்றை புதன் நிர்ணயிப்பார்.

    16. கல்வித்தடை, புத்தி மந்தம், வாக்கு நாணயம் தவறுதல், நரம்புத் தளர்ச்சி, மனதில் பீதி, கிலேசம்,

    வியாபார நஷ்டம், பிறதேச வாசம், விபரீத ஞானம் ஆகியவை புதனால் வரும் அசுப பலன்களாகும்.

    17. புதனால் வரும் துன்பங்கள் விலக ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ௩௫ வது சருக்கம் ராம வருண சம்வாதம் பாராயணம் செய்யலாம்.

    Next Story
    ×