என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
விசாகத்தில் அவதரித்த தாமிரபரணி
- அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து அவரால் விடுவிக்கப்பட்டது தாமிரபரணி என்கின்றன புராணங்கள்.
- அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.
வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெரிதும் போற்றப்படும் நதி
தாமிரபரணி, காவிரியை போல் இதுவும் அகத்திய முனிவரால் உருவான ஆறுதான்.
அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து, காக்கை வடிவில் வந்து விநாயகரால் தட்டிவிடப்பட்டு பரந்து விரிந்து பாய்ந்தது காவிரி.
அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து அவரால் விடுவிக்கப்பட்டது தாமிரபரணி என்கின்றன புராணங்கள்.
சிவன் பார்வதி திருமணத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்
கயிலைக்கு சென்றதால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.
உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப்
புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம் தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க,
அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.
அகத்தியர் அந்த முத்துமாலையை கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது.
அவ்வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர்.
பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும்,
உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்' என்று கூறி,
அவளையும் தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
பொதிகைமலையில் அகத்தியர் சிவன்-பார்வதி திருமண காட்சியை கண்ட மகிழ்வில் இருக்கும்போது
வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த
தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.
கிழக்கு நோக்கிய அருவியாக கலம்பகர்த்தம் என்ற தடாகக் குழியில் விழுகிறாள் தாமிரபரணி.
அதுவே பாணதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகம்தான், தமிழ் வளர்த்த
தவமுனிவராம் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்ட தாமிரபரணியின் நட்சத்திரம் என்பதும்
தாமிரபரணிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்