என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
ஏன் "பரமபத வாசல்" என்று பெயர்?
- திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு.
- மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு.
ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம்.
விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில் தான்.
அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்.
ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார்.
அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார்.
அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், "நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்" என்றனர்.
அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும்.
அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும்,
அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.
அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார்.
"என்னோடிருப்பீர்களாக" என்று பக்தர்களுக்கு அருளை அளிக்கிறார்.