கிருஷ்ண ஜெயந்தி விழா-கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்
- மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
- ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்
மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.
எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.
மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.
ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.