ஆன்மிக களஞ்சியம்

நம்பி வந்தவரை காப்பாற்றும் சுக்ராச்சாரியார்

Published On 2024-05-15 12:09 GMT   |   Update On 2024-05-15 12:09 GMT
  • மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.
  • எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.

விஷ்ணு பகவானின் வாமன அவதார காவியத்தில் மகாபலியை காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.

நவக்கிர கங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார்.

இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகனாக பிறந்தார்.

ஆதலால் இவருக்கு பார்க்கவன் என்ற பெயரும் 'கவி' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

சுக்கிரன் மிகச்சிறந்த சிவபக்தர் ஆவார்.

சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் 'அமிர்த சஞ்சீவி' மந்திரத்தை கற்றவர்.

இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண் தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார்.

முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கெல்லாம் குரு என்பதால் சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார்.

ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர்.

சுக்கிர திசை 20 ஆண்டுகள் நடக்கும். ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும்.

சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும் சனியும். எதிரி சூரியனும் சந்திரனும்.

சமமானவர்கள் செவ்வாயும் குருவும்.

மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.

எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.

ஒரு முறை சுக்கிராச்சாரி யாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது.

இத் தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம்.

Tags:    

Similar News

கருட வசனம்