பைக்

மீண்டும் களமிறங்கும் சன்னி.. பஜாஜ் நிறுவனத்தின் பலே திட்டம்

Published On 2023-10-04 15:32 IST   |   Update On 2023-10-04 15:32:00 IST
  • டெஸ்டிங் செய்யப்படும் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.
  • பஜாஜ் நிறுவனத்தின் சன்னி 60சிசி 2-ஸ்டிரோக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து வந்தது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மிகவும் பிரபல ஸ்கூட்டர் பிராண்டு, சன்னி-யை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக தெரிகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப்ரோடோடைப் மாடல் பூனே அருகில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

புகைப்படங்களின் படி பஜாஜ் நிறுவனம் சன்னி ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கி இருப்பதாக தெரிகிறது. டெஸ்டிங் செய்யப்படும் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் மற்றும் பாடி பேனல்கள் சன்னி ஸ்கூட்டரை போன்றே காட்சியளிக்கின்றன.

 

இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் சன்னி 60சிசி 2-ஸ்டிரோக் ஸ்கூட்டர் பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வந்தது. தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் ஸ்கூட்டரை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி பஜாஜ் நிறுவனம் புதிய சன்னி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

Photo Courtesy: Autocarindia

Tags:    

Similar News