ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் RV BlazeX எலெட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்
- மார்ச் 2025 முதல் வாரத்தில் இருந்து பைக்கின் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு 3 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் RV BlazeX எலெட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இதன் விலை ரூ.1.15 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மார்ச் 2025 முதல் வாரத்தில் இருந்து பைக்கின் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு 3 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.
RV BlazeX ஆனது 3.24 kWh லித்தியம்-அயன் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இதில் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை ஓட்டலாம். இந்த பைக் அதிகபட்சமாக 85 கிமீ வேகத்தில் செல்லும்.
ஸ்டெர்லிங் சில்வர் பிளாக் மற்றும் எக்லிப்ஸ் ரெட் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.
வேகமான சார்ஜிங் மூலம், இந்த பைக்கின் பேட்டரியை 80 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். அதே நேரத்தில் சாதாரணமாக வீட்டில் சார்ஜ் செய்யும்போது 80%-த்தை அடைய தோராயமாக 3 மணிநேரம் 30 நிமிடங்கள் ஆகும்.