கார்

விரைவில் அறிமுகமாகும் ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி

Published On 2022-10-27 10:43 GMT   |   Update On 2022-10-27 10:43 GMT
  • ஹோண்டா நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் வெளியீட்டு விவரங்களை ஹோண்டா அறிவித்து இருக்கிறது.

ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகும்.

2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அமேஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியா உள்பட உலக நாடுகளில் டீசல் என்ஜினுக்கான மோகம் குறைவதை அடுத்து இந்த காரின் டீசல் என்ஜின் வேரியண்ட் இறுதிக்கட்ட உற்பத்தியை எட்டுவது கடினம் தான்.

டீசல் வேரியண்டிற்கு மாற்றாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவியின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம். இது சமீபத்திய சிட்டி செடான் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என தெரிகிறது. தற்போது செடான் பிரிவில் சிட்டி மாடல் மட்டுமே ஹைப்ரிட் வடிவில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.

இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே போன்ற செட்டப் புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News