அனிமேடட் சீரிஸாக வருகிறது 'பாகுபலி கிரவுன் ஆப் பிளட்'
- கடந்த 2015-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி.
- இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது
கடந்த 2015-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி டிஸ்னி- ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படத்தின் முன் நடிந்த கதையைப் பற்றி என தெரிவித்துள்ளனர்.
இந்த வெப் சீரிஸை ராஜ மௌளி மற்றும் ஷரத் தேவராஜன் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஷரத் தேவராஜன் இதற்கு முன் தி லெஜண்ட் ஆஃப் அனுமன் அனிமேடட் சிரீஸை இயக்கியவர். அது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
'பாகுபலி கிரவுன் ஆப் பிளட்' அனிமேடட் சீரிஸில் பாகு மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையின் ரகசியத்தை பிரதிபலிக்கும் வகையில் மற்றும் நீண்ட நாட்களுக்கு முன் மறைக்கப்பட்ட உண்மைகளும் , மகிஷ்மதி சாம்ராஜியத்தின் பற்றிய ரகசியங்களை பல டிவிஸ்டுகளுடன் இந்த சீரிஸ் இருக்கும் என ராஜ மௌளி தெரிவித்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.