null
ரத்தம் சொட்ட சொட்ட ஒரு ஆக்ஷன் திரைப்படம்.. இயக்குனர் பிரேம் குமார் கிட்ட இருந்து
- விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்து பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 96.
- பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது மெய்யழகன் திரைப்படம்.
2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்து பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 96. இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது. திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இத்திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறது பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது மெய்யழகன் திரைப்படம். இத்திரைப்படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.
பிரேம் குமார் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே காதல் சார்ந்தும் மனிதனின் அன்பை சார்ந்தும் இருந்தது இதனால் இவரின் குணமே மிகவும் மென்மையானது மிகவும் அன்பானவன் என மக்களிடம் ஒரு பிம்பம் இருக்கிறது. இதனை உடைக்கும் விதமாக சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார்.
அதில் இயக்குனர் ஞானவேல் " நீங்க ஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுப்பீங்களா சார் ?" என கேள்வி எழுப்பினார். அதற்கு பிரேம் குமார் அளித்த பதிலே ஹைலைட்டானது. அதற்கு அவர் " நான் 96 திரைப்படம் இயக்கும் போதே என்னிடம் ஒரு ரத்தம் சொட்ட சொட்ட ஒரு ஆக்சன் திரைப்படத்திற்கான கதை என்னிடம் இருந்தது. நான் அக்கதையை விஜய் சேதுபதியிடம் கூறினேன். அதை கேட்டுவிட்டு என்னிடம் விஜய் சேதுபதி 3 நாள் பேசவில்லை. ஏனென்றால் அக்கதையில் அவ்வளவு வன்முறை இருந்தது. ஆனால் அந்த வன்முறைக்கு சிறந்த காரணமும் இருக்கிறது. கண்டிப்பா அக்கதையை படமாக எடுப்பேன். நான் இயக்கிய அந்த இரண்டு திரைப்படங்களை பார்த்து நான் மிகவும் மென்மையானவன் என என்னிடம் பேசுவர் ஆனால் நான் சிறுவயதில் மிகவும் வயலண்ட் ஆன ஒரு மனிதன்" என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.