சினிமா செய்திகள்

Retro - ரமலான் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியீடு

Published On 2025-03-31 19:13 IST   |   Update On 2025-03-31 19:13:00 IST
  • இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
  • இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு பாடல் மிக வைரலாக அமைந்தது. இப்பாடல் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவிற்கும் இடையே திருமணம் நடக்கும் போது அமைந்துள்ள பாடலாகும்.இப்பாடலின் வரிகளை விவேக் எழுத சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

இந்நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News