சினிமா செய்திகள்

சிக்கந்தர் சூட்டிங்: சல்மான் கானுக்கு 50 முதல் 70 பேர் கொண்ட 4 அடுக்கு பாதுகாப்பு

Published On 2024-11-09 13:15 IST   |   Update On 2024-11-09 13:15:00 IST
  • ஐதராபாத் மற்றும் மும்பை போலீஸ் ஏற்கனவே பாதுகாப்பு வழங்கி வருகிறது.
  • தற்போது முன்னாள் துணை ராணுவ வீரர்களை பாதுகாப்பிற்காக அமர்த்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள் பாலக்னுமா பேலஸ் ஓட்டலின் ஒரு பகுதியில் சூட்டிற்கு நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் ஓட்டல் முழுவதும் பயங்கர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் கோட்டையாக மாறியுள்ளது.

இந்த ஓட்டலில் விருந்தினர்கள் தங்குதவற்கு ரூம்கள் புக் செய்யலாம். ஆனால், ஓட்டலுக்குள் வரும்போது பயங்கரமான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேபோல் ஓட்டல் ஸ்டாஃப் உள்ளிட்டோர் பயங்கர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பை தாண்டி மேலும் இரண்டு அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய தனியார் பாதுகாப்பை அமைப்பை சல்மான் அணி வாடக்கைக்கு அமர்த்தியுள்ளார். தற்போது சல்மான் கான் எப்போதும் 50 முதல் 70 பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்.

சல்மான் கானுக்கு 4 அடுக்கு பாதுக்காப்பு சிஸ்டம் உள்ளது. முன்னாள் துணைராணுவ வீரர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே நீண்ட காலமாக சல்மான் கானுக்கு பாதுகாப்பு வழங்கும் அணி உடன் உள்ளது. மேலும் ஐதராபாத் போலீஸ் மற்றம் மும்பை போலீசார் பாதுகாப்பு உள்ளது.

ஐதராபாத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து சல்மான் கான் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்படகின்றன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News