null
'சிக்கந்தர்' - சல்மானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா
- குட் பை படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
- அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது.
தெலுங்கு திரையுலகில் முதல் முதலாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
பின்னர் தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான புஷ்பா படம் வெற்றியை தொடர்ந்து தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டையை கிளப்பி மூன்று மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.
அமிதாப் பச்சன் படமான குட் பை படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பாலிவுட் நடிகைகள் தென்னிந்தியாவில் நடிப்பதும், தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் நடிப்பதும் பல காலமாகவே வழக்கத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டி ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய படமாக மாறியது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பதிவில் தனது அடுத்த படம் பற்றிய அப்டேட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள சிக்கந்தர் படத்தில் தான் தற்போது இணைந்துள்ளதாக ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் அல்லு அர்ஜூனின் புஷ்பா-2 படத்திலும், தனுஷின் குபேரா படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இந்தியாவிலேயே தற்போது அதிக பட வாய்ப்புகளை கொண்டு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக மீண்டும் இந்தி பட வாய்ப்பை தட்டி பறித்துள்ளார்.