சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுன்

ரசிகரின் தந்தை சிகிச்சைக்கு உதவி செய்த அல்லு அர்ஜுன்.. குவியும் வாழ்த்து..

Published On 2023-02-11 12:22 IST   |   Update On 2023-02-11 12:22:00 IST
  • நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


அல்லு அர்ஜுன்

இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் சார்பில் ஒரு பதிவு சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. அதில் ரசிகர்களான தங்களில் ஒருவரின் தந்தை நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தி அல்லு அர்ஜுனின் கவனத்திற்கு சென்றுள்ளது. ரசிகரின் இந்த நிலையை அறிந்ததும் நடிகர் அல்லு அர்ஜுன் தனது குழுவினர் மூலம் உதவி செய்துள்ளார். இதனை அதே ரசிகர் மன்றம் தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளது. இந்த செயலால் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News