சினிமா செய்திகள்

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் அறிவிக்கட்டும்- அருண் விஜய்

Published On 2023-08-04 19:07 IST   |   Update On 2023-08-04 19:07:00 IST
  • நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது.
  • இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த "யானை" திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை. தற்போது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது.


மேலும், இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளரை சந்தித்த நடிகர் அருண் விஜய்யிடம் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு, "நல்ல விஷயம் தானே. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் அவர் அறிவிக்கட்டும். அவர் வரும்போது நாம் வரவேற்போம்" என்றார். மேலும், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேட்டபோது, "நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். பொதுப்பணிகளும் இருக்கிறது. எதிர்காலத்தில் பார்ப்போம்" என்றார்.

Tags:    

Similar News