சினிமா செய்திகள்

இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது - இயக்குனர் வெற்றிமாறன்

Published On 2023-01-07 08:07 GMT   |   Update On 2023-01-07 08:07 GMT
  • பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையுடன் இணைந்து ‘இதயத் திரைப்பட விழாவை’ நடத்தியது.
  • இதில் வெற்றி பெற்ற குறும்படங்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் விருது வழங்கினார்.

சென்னையில் உள்ள பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையுடன் இணைந்து 'இதயத் திரைப்பட விழாவை' நடத்தியது. இதில் பங்கேற்ற சிறந்த குறும்படங்களுக்கான விருதை இன்று பிரசாந்த் மருத்துவமனை அறிவித்தது.


விருது வழங்கிய இயக்குனர் வெற்றிமாறன்

இந்த விருதை இயக்குனர் வெற்றிமாறன் வழங்கினார். இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த குறும்படங்களுக்கு விருதுடன் முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும்,'சேவ் யங் ஹார்ட்ஸ்' பிரச்சாரம் குறித்த இதழையும் அவர் வெளியிட்டார்.


விருது வழங்கிய இயக்குனர் வெற்றிமாறன்

இந்த நிகழ்ச்சி குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, "இன்று நான் பார்த்த படங்கள் அனைத்தும் மிகவும் அற்புதமானவை. அவை உண்மையிலேயே இளைஞர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. குறிப்பாக இளைஞர்களிடையே பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு இருப்பது குறித்துநான் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன்.வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News