பிரான்ஸில் பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன்.. வைரலாகும் பதிவு
- பிரதமர் மோடி சமீபத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
- இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார்.
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ஆம் தேதி தேசிய தினம் 'பாஸ்டில் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமான பிரான்ஸ் சென்றிருந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வறவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார். மேலும், பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரவு விருந்து வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இந்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.