2020-க்கு பிறகு 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த டேவிட் வார்னர்
- 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்.
- ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.
ஆஸ்திரேலியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி கிரீன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 68.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32 ரன்னுடனும் லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் தனது 25-வது டெஸ்ட் சதத்தையும், 45-வது சர்வதேச சதத்தையும் அடித்து, சமீபத்திய விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். ஜனவரி 2020-க்குப் பிறகு இது அவரது முதல் டெஸ்ட் சதம்.
100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது தொடக்க வீரர் மற்றும் 14-வது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். போட்டிக்கு முன், வார்னர் 71.20 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 45.52 சராசரியுடன் 7922 ரன்கள் எடுத்திருந்தார்.