மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
- அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய வீராங்கனை பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார்.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டதை எட்டி உள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் கேப்டவுனில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார். கேப்டன் மெக் லேனிங் 49 ரன்களும் (நாட் அவுட்), அலிசா ஹீலி 25 ரன்களும், ஆஷ்லி காட்னர் 31 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.