ஆன்மிக களஞ்சியம்

குண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்

Published On 2024-12-30 12:04 GMT   |   Update On 2024-12-30 12:04 GMT
  • பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது.
  • சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.

கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்த நாளில் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும்.

இது புலிப்பாணி, அகத்தியர் சொன்ன நல்லநாள். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை.

பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது.

சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.

தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது.

ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

Similar News