- சோமவாரம்‘ என்பது விரதம் மேற்கொள்ளும் நாள். எனவே அன்று தலையில் எண்ணை தேய்த்துக் கொள்ளக் கூடாது.
- சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசி) லட்சம் சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும்.
01. பிலிப்பைன்சில் வாழும் மக்கள் சிவனைச் 'சிவப்பன்' என அழைத்து வழிபடுகின்றனர்.
02. சி-சிவன், வா-அருள்,ய-ஆவி, ந-திரோதம், ம-மலம் என 'சிவாயநம' என்பதில் ஒவ்வோர் எழுத்தும் ஓர் உண்மையினைச் சுட்டி நிற்கிறது.
03. சிவராத்திரி பெரு நாளைச் சிவபெருமான் லிங்கத்தில் தோன்றிய நாளென்றும், சோதிமயமாய்த் தாணு வடிவில் பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் இடையே தோன்றிய நாளென்றும், புனர் உற்பவத்திற்காகத் தேவி பூஜை செய்த நாளென்றும் கூறுகின்றனர்.
04. சிவ வழிபாட்டினை இன்னும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் தொடர்கின்றனர்.
05. காஞ்சி ஏகாம்பர நாதரைத் திங்கட்கிழமை தோறும் வணங்கினால் நலம் பெருகும்.
06. திருவூறல் என்னும் திருத்தலத்தில் உள்ள 'நந்திமடு'வில் நீராடுதல் விசேஷம்.
07. திருப்பாசூரு சிவ திருத்தலத்தில் உச்சிக் காலப் பூஜையை தரிசிப்பது நல்லது.
08. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி சிவன் ஆலயத்தில் ஒரே வெள்ளைக் கல்லில் செய்த 6 அடி நீளமுள்ள நந்தி உள்ளது. இதன் அகலம் 3அடி.
09. சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று எண் குணத்தான். அந்த எட்டுக் குணங்களாவன் பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒரு வினையின்மை, குறைவில்லா அறிவுடைமை, கோத்திரம் இன்மை.
10. ராஜபோகத்தை விரும்புவோன் பழுதில்லாத பத்துக் கோடி மலர்களால் பாத்திவ லிங்கத்தைப் பூஜிக்க வேண்டும்.
11. பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்குப் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை. இதுவே ஜென்ம நட்சத்திரம். இதனை சங்க இலக்கியம் 'பிறவா யாசகப் பெரியோன்' எனக் கூறுகின்றது.
12. 'சோமவாரம்' என்பது விரதம் மேற்கொள்ளும் நாள். எனவே அன்று தலையில் எண்ணை தேய்த்துக் கொள்ளக் கூடாது.
13. சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசி) லட்சம் சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும்.
14. முற்பிறப்பில் சிவனைக் குறித்துத் தவமிருந்து (பதிம்தேசி) கணவன் வேண்டும் என்று ஐந்து முறை கூறியதால் திரவுபதி ஐந்து கணவரை மணக்க வேண்டியதாயிற்று.
15. 'சிவாயநம' என்னும் சூட்சும பஞ்சாட்சரம் ஒரு தலைமாணிக்கம் என்றும், 'சிவயசிவ' என்ற காரண பஞ்சாட்சரம் இருதலை மாணிக்கம் என்றும் அழைக்கப்படுகின்றது.
16. சிவபெருமானின் திருக்காதுகளில் குழை வடிவில் இருக்கும் கந்தர்வர்கள் "அவசுதரர், கம்பளர்" அவர்களை 'ஹாஹா', 'ஹூஹூ' என்றும் அழைப்பர்.