ஆன்மிக களஞ்சியம்

திருமணம் கைகூட செய்யும் மயிலம்

Published On 2024-12-30 11:00 GMT   |   Update On 2024-12-30 11:00 GMT
  • மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது.
  • அதற்கு காரணம் மயிலம் தலத்துக்கு சென்று வந்தால் உடனே திருமணம் கைகூடும், மற்றும் எடுத்தக்காரியம் உடனே வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.

மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது.

அதற்கு காரணம் மயிலம் தலத்துக்கு சென்று வந்தால் உடனே திருமணம் கைகூடும், மற்றும் எடுத்தக்காரியம் உடனே வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் திண்டிவனத்தை கடந்ததும் மயிலம் ஊரை அடையலாம்.

மயிலம் மெயின் பஜாரில் இருந்து பார்த்தாலே மயிலம் மலை முருகன் கோவில் தெரியும்.

திண்டிவனம் நெடுஞ்சாலையில் இருந்து திருப்பாதிரிபுலியூர் செல்லும் வழியில் சென்றால் மிக எளிதாக மயிலம் தலத்துக்கு செல்ல முடியும்.

மயிலம் அடிவாரத்தில் இருந்து குன்று நோக்கி வரும் சாலையில் வந்தால் கோவிலின் தெற்கு வாசல் வந்து சேருவோம்.

Similar News