வழிபாடு

பக்தரால் உருவான ஆலயம் வடபழனி

Published On 2023-10-20 04:17 GMT   |   Update On 2023-10-20 04:17 GMT
  • ஓலைக் குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார்.
  • பழமையான கோவில்களில், வடபழனி முருகன் கோவிலும் ஒன்று.

சென்னையில் உள்ள பழமையான கோவில்களில், வடபழனி முருகன் கோவிலும் ஒன்று. இது தமிழ்நாட்டின் முருக பக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17-ம் நூற்றாண்டின் இறுதியில் முருக பக்தர் ஒருவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. வறியவரான அந்த பக்தர், ஆரம்ப காலத்தில் ஒரு ஓலைக் குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார்.

தலபுராண கதைகளின்படி ஒரு நாள் அந்த பக்தர் பூஜை செய்து கொண்டிருந்தபோது, அவருள் தெய்வீக சக்தி பரவுவதை உணர்ந்துள்ளார். சொல்வதெல்லாம் சித்திக்கும் சக்தியையும் அக்கணத்தில் இருந்து பெற்றுள்ளார். இதன்பின்னர் அவர் திருத்தணி சென்று தனது நாக்கினை அறுத்து பலிகாணிக்கையாக செலுத்தி விட்டார்.

இப்படியாக இவரது கீர்த்தி பரவ ஆரம்பித்து குடிசைக்கோவில் நாளடைவில் சிறிய கோவிலாக மாறி, தற்போது நாம் காணும் மிகப்பெரிய கோவிலாக வளர்ச்சியடைந்துள்ளது. கோவிலுக்கென்று பிரத்தியேக தீர்த்தக்குளம், பெரிய வளாகம் கொண்டு வடபழனி முருகன் கோவில் திகழ்கிறது.

Tags:    

Similar News