பொது மருத்துவம்

அவசர அவசரமாக சாப்பிடுவதில் இவ்வளவு பிரச்சனையா...?

Published On 2024-05-13 06:30 GMT   |   Update On 2024-05-13 06:30 GMT
  • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்துதான் கிடைக்கிறது.
  • விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும்.

நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவில் இருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த உணவை நிதானமாகவும், ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

நம்மில் சிலர் நேரம் போய்விட்டது என்று நினைத்து அவசர அவசரமாக சாப்பிடுவது வழக்கம். உண்மையில் அப்படி சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும். அந்தவகையில் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வயிறு உப்புதல், வாய் துர்நாற்றம், மலச்சிக்கல், நாக்கில் மாவு படிதல், செரிமானக்கோளாறு, நெஞ்செரிச்சல், உண்ட மயக்கம் இதுபோன்ற விளைவுகள் அவசர அவசரமாக சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாது. செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் ஆகும் என்பதால் இந்த வகையான பிரச்சினைகள் வரும்.

எனவே உணவை சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து சம்மணம் போட்டு பொறுமையாக, நிதானமாக வாயில் அசைபோட்டு தான் சாப்பிட வேண்டும். உதாரணத்துக்கு நாம் பிரியாணியை மட்டும் எப்படி நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிடுகிறோமோ அதேபோன்று சாப்பிட வேண்டும்.

ஏனென்றால் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் முக்கியமான ஒன்று எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகும். விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும். குடல் ஹார்மோன்களை சீர்குலைத்து உங்களுக்கு முழுமையான உணர்வை ஏற்படுத்தும்.

வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படலாம்.

வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு விரைவில் வளர்ச்சிதை மாற்ற நோய் வந்தது. குறிப்பாக வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் HDL கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வேகமாக சாப்பிடுவது இரைப்பை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் குடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

வேகமாக உணவு சாப்பிடுகிறவர்கள் உணவை சாப்பிடுவதில்லை மாறாக முழுங்கவே செய்கிறார்கள். இதனால் மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட கூட வாய்ப்புள்ளது. 

Tags:    

Similar News